நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கோப்ரா படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Final Schedule Shooting Update of Cobra : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் அடுத்ததாக மகான், கோப்ரா, பொன்னியின் செல்வன், துருவ நட்சத்திரம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றனர்.

தமிழக கிரிக்கெட் அணிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு

மகான் திரைப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க அந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்து வருகிறார் துருவ் விக்ரம். மேலும் கோப்ரா படத்தினை இமைக்கா நொடிகள் புகழ் அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார்.

Maanaadu படத்திற்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் – முதல்வருக்கு வேண்டுகோள் வைத்த தயாரிப்பாளர்! | HD

இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில் விக்ரம் வேறு படங்களின் படப்பிடிப்புகளில் பிசியாக இருந்து வந்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது கோப்ரா படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளன.

இதனால் விக்ரம் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். விரைவில் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து ரிலீஸ் குறித்து தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.