வாரிசு படம் குறித்து எதிர்பாராத நேரத்தில் அப்டேட்டை வெளியிட்டுள்ளது படக்குழு.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் இருப்பவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு.

முடிவுக்கு வரும் வாரிசு... எதிர்பாராத நேரத்தில் படக்குழு வெளியிட்ட அறிவிப்பு - வைரலாகும் பதிவு

ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், குஷ்பூ, சங்கீதா, சம்யுக்தா, யோகி பாபு, ஸ்ரீகாந்த், நடிகர் சாம் என எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது படக்குழு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது இறுதி கட்ட ஷூட்டிங் நாளை தொடங்குகிறது. இரண்டு ஆக்சன் காட்சிகள் மற்றும் இரண்டு பாடல்கள் மட்டுமே படமாக்கப்பட உள்ளது. அத்துடன் படப்பிடிப்பு மொத்தமாக முடிவுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடிவுக்கு வரும் வாரிசு... எதிர்பாராத நேரத்தில் படக்குழு வெளியிட்ட அறிவிப்பு - வைரலாகும் பதிவு

மேலும் இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என்பதை படக்குழு மீண்டும் நினைவுபடுத்தி உள்ளது. இது குறித்த அறிவிப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.