உண்மையில் பொங்கல் வின்னர் யார் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ் சினிமாவில் இந்த வருட பொங்கலுக்கு அஜித் நடிப்பில் துணிவு மற்றும் விஜய் நடிப்பில் வாரிசு என இரண்டு திரைப்படங்கள் நேருக்கு நேராக மோதிக்கொண்டன.

துணிவு திரைப்படம் அதிரடி ஆக்சன் காட்சிகள் உடன் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் வாரிசு திரைப்படம் குடும்ப படமாக வெளியாகி வரவேற்பை பெற்றது.

வாரிசு படத்தை காட்டிலும் துணிவு திரைப்படம் படத்தின் பட்ஜெட்டை வைத்து பார்க்கையில் நல்ல வசூல் பெற்று வருவதாக சொல்லப்பட்டது. அதேபோல் வாரிசு துணிவை காட்டிலும் அதிகமாக வசூல் செய்திருந்தாலும் பட்ஜெட்டோடு ஒப்பிடுகையில் லாபக் கணக்கில் இன்னும் சேரவில்லை எனவும் சொல்லப்பட்டு வந்தது.

இந்த நிலையில் வாரிசு படத்திற்கான தமிழகத்தின் நேற்றைய வசூல் பட்ஜெட்டை தாண்டி லாபக் கணக்கில் இணையை தொடங்கி விட்டதாக தெரியவந்துள்ளது. இதனால் தமிழகத்தை பொறுத்தவரை இரண்டு படங்களுமே பொங்கல் வின்னர் தான்.

அஜித்தின் துணிவு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் என்றால் வாரிசு திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்துள்ளது என்பதுதான் நிதர்சனமான உண்மை என கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.