ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல் ஒன்றில் படத்தின் புரமோஷனுக்காக படக்குழுவினர் சீரியலில் நடித்துள்ளனர். விரைவில் இந்த எபிசோட் வெளியாகும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் மற்றும் இயக்குனரான ஆர்.ஜே. பாலாஜி அவர்களின் இயக்கத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது வெளியாக தயாராக இருக்கும் படம் தான் “வீட்ல விசேஷம்”.

 இந்த படத்தில் ஆர் ஜே பாலாஜி, அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி போன்ற முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் ஜூன் 17 ஆம் தேதியில் இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்திற்கான பிரமோஷன்களை  படக்குழுவினர்கள் செய்து வருகின்றனர். அந்த வகையில்  புது முயற்சியாக ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தேவயானி அவர்கள் நடிக்கும் “புது புது அர்த்தங்கள்” என்ற சீரியலில் இப்படத்தின் பிரமோஷனுக்காக படக்குழு நடித்துள்ளது.  இந்த சீரியல் மூலம் நடிகர் சத்யராஜ் அவர்கள் நடித்து இருப்பதைப் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வத்தோடு இருக்கின்றனர்.  விரைவில் இந்த எபிசோட் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.