Fever Tips
Fever Tips

Fever Tips : ☆ நம் உடலில் கிருமிகள் வந்துவிட்டால், நம் நோய் எதிர்ப்பு செல்கள் அவற்றை அடையாளம் கண்டு, அவர்களை எதிர்த்து போராடும். அப்போது உடல் வெளியிடும் வெப்பமே காய்ச்சல்.

☆ காய்ச்சலின் போது ஜீரண உறுப்புக்கள் மிக மெதுவாகதான் வேலை செய்யும். ஆகவே நிறைய திட உணவுகளை உண்ணுவதை தவிர்த்து, கஞ்சி பழச் சாறு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

☆ காய்ச்சல்:
1) சுக்கு, மிளகு, திப்பிலி இவைகளை சம அளவு எடுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வர காய்ச்சல் குணமாகும்.

2) ஓமவல்லி இலை, காம்பு கசாயம் செய்து குடிக்க இருமல், சளி, காய்ச்சல் குணமாகும்.

3) துளசி இலைச்சாறு இஞ்சி கலந்து கசாயம் செய்து குடித்தால் காய்ச்சல் குணமாகும்.

4) மிளகுத்தூள், 2 பல் பூண்டு, தேன் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து குடித்து வந்தால், கிருமிகள் வேகமாய் அழியும்.

5) வேப்பிலையை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரினை குடித்தாலும் காய்ச்சல் விரைவில் சரியாகும்.

☆ குடிநீரை எப்போதும் காய்ச்சி ஆற வைத்துக் குடித்தால், மழைக்காலத்திலும் குளிர் காலத்திலும் வருகிற காய்ச்சல் வராது.

அதோடு, டைபாய்டு, காலரா, ஹெப்படைட்டிஸ் ஏ ஆகிய பிரச்னைகளையும் முன்கூட்டியே தடுக்கலாம்.

☆ உணவில் மிளகு ரசம், இஞ்சி ரசம், பூண்டு ரசம் என்று தினமொரு ரசம் சேர்த்துக்கொண்டால், உடலில் எதிர்ப்புச்சக்தி அதிகமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here