Fera case: Sasikala : Registered 4 cases Against Sasikala | Tamil nadu | Chennai | jayalalithaa | India | is an Indian politician Tamil Nadu

Fera case: Sasikala :

சென்னை: அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்கு வீடியோ கான்பரன்சில் சசிகலா ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சசிகலா இன்று ஆஜராகவில்லை.

சசிகலா, அவரது அக்கா மகன் பாஸ்கரன் ஆகியோர் கொடநாடு டீ எஸ்டேட் வாங்கியதில் பல கோடி ரூபாய் வெளிநாடுகளில் இருந்து பறிமாற்றம் செய்துள்ளதாகவும் , வெளிநாடுகளில் இருந்து ஜெஜெ டிவிக்கு எலெக்ட்ரானிக் பொருட்கள் வாங்கியதில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும் புகார் எழுந்தது.

இதையடுத்து அமலாக்கத்துறையினர் சசிகலா மீது 4 வழக்குகள் பதிவு செய்தனர். அதை தொடர்ந்து சசிகலா மற்றும் பாஸ்கரன் மீது கடந்த 2017ம் ஆண்டு மூலம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

எனக்கு எதிராக ஆதாரம் இல்லை: முதல்வர் பேட்டி!

இதையடுத்து, குற்றச்சாட்டு பதிவுக்கு பின்பு சசிகலா வழக்கு விசாரணைக்கு சரியாக ஆஜராகவில்லை எனவும், குற்றச்சாட்டு பதிவில் சசிகலா முறையாக கையெழுத்து போடுவதில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் சசிகலா மீது மறு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அப்போது சசிகலா பேசுகையில்: “தான் எந்த குற்றமும் செய்யவில்லை, அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

அதன்படி சசிகலா கூறியவாறு குறுக்கு விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது. பின்னர் நீதிபதி குறுக்கு விசாரணை குறித்து கேள்வி கேட்பதற்காக சசிகலாவை இன்று நேரில் ஆஜர்படுத்த சிறை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.

ஆனால் இதனை எதிர்த்து சசிகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சசிகலாவை வீடியோ கான்பரன்சில் ஆஜர்படுத்தி விசாரணை நடத்த உத்தரவிட்டது.

இந்நிலையில், இன்று விசாரணைக்கு வீடியோ கான்பரன்சில் சசிகலா ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று சசிகலா ஆஜராகவில்லை. எனவே வழக்கு விசாரணை வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.