திரைப்பட தொழிலாளர்களுக்கு அஜித் 10 லட்சம் நிதி உதவி - FEFSI President RK Selvamani Press Meet

Thala Ajith Donates to FEFSI : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் பற்றி உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்தில் இந்த வைரசின் இரண்டாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக கொரானா தடுப்பு பணிகளுக்காக மக்கள் தாராளமாக நிதி அளிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். இதனால் திரையுலக பிரபலங்கள் பலரும் நிதி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் தல அஜித் முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூபாய் 25 லட்சம் நிதியாக அளித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது பெப்ஸி யூனியனை சேர்ந்த சினிமா தொழிலாளர்களின் உதவிக்காக ரூ 10 லட்சம் அளித்துள்ளார்.