Fareena About Bharathi Kannamma Climax

பாரதி கண்ணம்மா சீரியல் கிளைமேக்ஸ் இப்போது என ரசிகர் கேட்க வில்லியாக நடித்து வரும் பரீனா கூறிய பதில் அனைவரையும் கடுப்பாக்கி உள்ளது.

Fareena About Bharathi Kannamma Climax : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் ரோஷினி ஹரிப்ரியன் நாயகியாக நடிக்கிறார். வில்லியாக ஃபரீனா நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் எப்போது பாரதியும் கண்ணம்மாவும் ஒன்று சேர்வார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைத்து ரசிகர்களும் இருந்து வருகிறது. ஆனால் இயக்குனர் கதையை வெவ்வேறு டிராக்குகளில் கொண்டு சென்று க்ளைமாக்ஸை தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறார்.

இந்த நிலையில் தற்போது பரினா ரசிகர்களுடன் உரையாடிய போது அவரிடம் ஒருவர் பாரதிகண்ணம்மா சீரியல் கிளைமேக்ஸ் எப்போது என கேட்டுள்ளார். அதற்கு பரீனா வரும் 2051-ல் என கூறியுள்ளார்.

பதில் சொல்ல முடியாது என்பதைக் கூறாமல் இப்படி நக்கலாக பதில் அளித்திருப்பது ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது.