மறைந்த நடிகர் விவேக்கின் அஸ்தியை வைத்து அவரது குடும்பத்தினர் செய்த காரியம் அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது.

Fans Wishes to Vivek Family : தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். தன்னுடைய காமெடிகளில் சமூக சீர்திருத்தத்தை மேற்கொண்டவர். தமிழகம் முழுவதும் ஒரு கோடி மரங்களை நட வேண்டும் என்ற கனவுடன் செயல்பட்டு இதுவரை 27 லட்சம் மரக்கன்றுகளை நட்டவர்.

விவேக்கின் அஸ்தியை வைத்து அவரது குடும்பத்தினர் செய்த காரியம் - பாராட்டும் ரசிகர்கள்

கொரோனாவின் பயமின்றி வாழ அனைவரும் கொரானா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி அரசு மருத்துவமனையில் உடனே தடுப்பூசி எடுத்துக்கொண்டார் விவேக். இவர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட மறுநாள் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார்.

விவேக்கின் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரின் நினைவாக இளைஞர்கள் பலரும் ஆங்காங்கே மரக்கன்றுகளை நட தொடங்கினர். இந்த நிலையில் தற்போது விவேக் அவர்களின் குடும்பத்தார் விவேக்கின் ஆஸ்தியை மண்ணில் போட்டு அதன் மீது பல மரக்கன்றுகளை நட்டு உள்ளனர். விவேக்கு வந்ததாக இதை விட அதிக ரசிகர்கள் பலரையும் நெகிழ வைத்தது மட்டுமல்லாமல் பாராட்டவும் வைத்துள்ளது.