மும்பை விமான நிலையத்திற்கு வந்த பூஜா ஹெக்டேவுக்கு ரசிகர்கள் கொடுத்த இன்ப அதிர்ச்சி.

Fans Surprise to Pooja Hegde in Airport : புட்ட பொம்மா என்ற பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் தான் பூஜா ஹெக்டே. இவர் தமிழ் சினிமாவில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

ரசிகர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்.. விமான நிலையத்தில் மிரண்டு போன பூஜா ஹெக்டே

இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் வேறு மொழிகளில் சில படங்கள் நடித்துள்ளார். மீண்டும் தமிழில் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் படத்தில் இளைய தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் பூஜா ஹெக்டே விற்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளனர். இந்நிலையில் மும்பை விமான நிலையத்தில் காரில் இருந்து இறங்கிய பூஜா ஹெக்டேவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக் கூறும் விதமாக கையில் பேனரை பிடித்துக்கொண்டு சர்ப்ரைஸ் கொடுத்தனர்.

ரசிகர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்.. விமான நிலையத்தில் மிரண்டு போன பூஜா ஹெக்டே

இதனை கண்டு இன்ப அதிர்ச்சியான பூஜா ஹெக்டே ரசிகர்களுக்கு கைகொடுத்து தனது நன்றியை கூறிவிட்டு விமான நிலையத்திற்குள் சென்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.