அஜித்தும் விஜயும் கொரோனா தடுப்பு ஊசி போட்டு கொண்டார்களா இல்லையா என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.

Fans Request to Thala Thalapathy : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பற்றி உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவின் இந்த வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்தத் தாக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது.

தமிழகத்திலும் தொடர்ந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. திரைப்பட படப்பிடிப்புகள் நடத்திக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சூட்டிங்கில் பங்கேற்க அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் என கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசி போட்டால் மட்டுமே சம்பளம் : ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு

பல திரையுலக பிரபலங்கள் தங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால் தளபதி விஜய் இதுவரை தடுப்பு ஊசி செலுத்தி கொண்டாரா என தெரியவில்லை. சில தினங்களுக்கு முன்னர் அவர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தகவல் பரவியது. ஆனால் அதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.

பிக்பாஸ் நடிகை காஜல் பசுபதிக்கு 2-வது திருமணம் – அவரே சொன்ன தகவல் | Latest Cinema News | HD

அதேபோல் வலிமை படத்தின் படப்பிடிப்பும் வெகு விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதனால் அஜித்தும் தடுப்பூசி எடுத்துக் கொண்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை இவர்கள் இருவரும் தடுப்புசி எடுத்துக் கொண்டிருந்தால் அதை வெளியில் தெரியப்படுத்தலாம். இதனால் ரசிகர்களும் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக் கொள்வார்கள் என்று கோரிக்கை சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.