Fans Request to Bharathi Kannamma Team
Fans Request to Bharathi Kannamma Team

பாரதிகண்ணம்மா சீரியலின் புதியக் அம்மாவை பார்த்து ரசிகர்கள் கடுப்புடன் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Fans Request to Bharathi Kannamma Team : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களிலும் ஒன்று பாரதி கண்ணம்மா.

இந்த சீரியலில் அருண் பிரசாத், ரோஷினி ஹரிப்ரியன், அகிலன், ஸ்வீட்டி, ரூபாஸ்ரீ, பரினா அசாத் நெட்வொர்க் நடித்து வருகின்றனர்.

சீரியலில் ஆரம்பத்தில் பாரதி, கண்ணம்மா ஆகிய இருவருக்கும் இடையே இருக்கும் புரிதலும் கெமிஸ்ட்ரியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்தது. இந்த சீரியல் நல்ல ரீச்சை பெற இதுவே முக்கிய காரணம்.

ஆனால் கடந்த ஒரு வாரமாக பாரதி கண்ணம்மாவிடம் கோபப்படுவது, சந்தேகப்படுவது என வேறொரு கோணத்தில் பயணித்து வருகிறது.

இது ரசிகர்களுக்கு உச்சகட்ட வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சீரியலில் இப்படியான காட்சிகளை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது இந்த சீரியலின் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாக ரசிகர்கள் இதனை கண்டமேனிக்கு வச்சி செய்து வருகின்றனர்.

உங்க அப்ரோச் மொத்தமா தப்பு.. எல்லா ஆண்களும் இப்படி சந்தேக புத்தியோட இருக்கிறது இல்ல, ஆரம்பத்துல கண்ணம்மாவை அப்படி காதலிச்ச பாரதி இப்படி எப்படி சந்தேகப்பட முடியும்.

மொதல்ல ஸ்டோரியை மாத்துங்க, பாரதிய அப்படி கோபப்பட வேணாம்னு சொல்லுங்க. அவருக்கு சுத்தமா கோபமே வரவில்லை முகத்த பாத்தா சிரிப்பு தான் வருது. எப்பயும் ஒரே ரியாக்ஷன்.. டயலாக் இல்லாம வெறும் மைண்ட் வாய்ஸ் வச்சு ஓட்டுறது வெறுப்பா இருக்கு என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ரசிகர்களின் கருத்துக்களை அறிந்து இயக்குனர் இந்த சீரியலின் கதையில் மாற்றத்தை கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். சீரியல் தரப்பு என்ன செய்கிறது என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.