Fans Fight with Thalapathy Manager
Fans Fight with Thalapathy Manager

இந்தப் பாட்டுக்கு நான் அடிமை ஆகிவிட்டேன் என மாஸ்டர் பட பிரபலம் ஜெகதீஷ் தெரிவித்துள்ளார். இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் அவரை வச்சி செய்து வருகின்றனர்.

Fans Fight with Thalapathy Manager : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். அவருடன் நீண்ட வருடங்களாக பயணித்து தற்போது தளபதியின் மேனேஜராக இருப்பவர் ஜெகதீஷ்.

மேலும் இவர் மாஸ்டர் திரைப்படத்தில் லைன் புரௌடியூசராகவும் பணியாற்றியுள்ளார். இவர் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

நானும் விஜய்யும் இணைந்து நடிக்காததற்கு ஒரே காரணம் இது தான் – பல வருடங்களுக்கு முன்பே அஜித் சொன்ன விஷயம்!

அந்தப் பதிவில் கோப்ரா படத்திலிருந்து வெளியான தும்பி துள்ளல் என்ற பாடலுக்கு தான் அடிமையாகி விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் மற்றும் இயக்குனர் அஜய் ஞானமுத்து ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஜெகதீஷின் இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள் மாஸ்டர் அப்டேட் கேட்டு தொந்தரவு செய்ய தொடங்கியுள்ளனர்.

ரசிகர் ஒருவர் உங்களின் ட்வீட் நோட்டிபிகேஷன் வந்ததும் மாஸ்டர் டிரைலர் அப்டேட் என நினைத்தேன் என கூறியுள்ளார்.

ஒரு ஏழு நிமிசத்துல அடிமையா? எதையாவது சொல்லிட்டு இருக்காம மாஸ்டர் டிரைலர் அப்டேட் விடுங்க ப்ரோ என கூறியுள்ளார்.

சாத்தான்குளம் கொலை பற்றி தளபதி விஜய் குரல் கொடுப்பாரா என இன்னொரு ரசிகர் கேட்டுள்ளார்.

மாஸ்டர்னு ஒரு படம் வருமா வராதா? உங்க டீம்ல இது ஒரு அப்டேட் கூட வரல என்ன பண்ணிட்டு இருக்கீங்க என கோபத்துடன் கேட்டுள்ளார் விஜய் ரசிகர் ஒருவர்.

மாஸ்டர் டீசர் ட்ரெய்லர் அப்படியே தவிர மற்ற எல்லாவற்றையும் பற்றியும் டுவீட் போடுறீங்க இன்னொரு ரசிகர் விமர்சித்துள்ளார்.