Fans Comments on Keerthy Suresh Photo

கீர்த்தி சுரேஷ் நடித்த பழைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருக்கு கோரிக்கை ஒன்றை வைத்து வருகின்றனர்.

Fans Comments on Keerthy Suresh Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். பழம்பெரும் நடிகை மேனகாவின் மகளான இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கு சினிமாவில் மகாநதி என்ற படத்தில் நடித்து தேசிய விருதையும் பெற்றார். ஆரம்பத்தில் குண்டாக இருந்த கீர்த்தி சுரேஷ் தற்போது எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். அவர் பழையபடி பப்ளியாக கொஞ்சம் குண்டாக இருந்தால் தான் அழகு என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பழைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மீண்டும் இப்போது இப்படி பப்ளியாக மாறுவீர்கள்? உங்கள இப்படி பார்க்க ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் கொஞ்சம் குண்டாகுங்க என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.