அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துக் கொண்டிருக்கும் ஜவான் திரைப்படம் விஜய் படத்தின் சாயலை போல் இருப்பதாக கருத்து தெரிவித்து வரும் ரசிகர்கள் இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக திகழ்பவர்தான் அட்லி. இவர் தற்போது ஷாருக்கானின் நடிப்பில் உருவாகும் “ஜவான்” திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இதில் இரட்டை வேடத்தில் நடிக்கும் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா இணைந்துள்ளார். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பழமொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டைன்மென்ட் சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார்.

விஜய் படத்தின் சாயலில் இருக்கும் "ஜவான்" திரைப்படம் - கருத்து தெரிவித்து வரும் ரசிகர்கள்.

அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படம் 2023 ஆம் ஆண்டில் திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களின் இடையே அதிக எதிர்பார்ப்பை தூண்டி உள்ள நிலையில் தற்போது சில ரசிகர்கள் இப்படத்தை பற்றின கருத்துக்களையும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

விஜய் படத்தின் சாயலில் இருக்கும் "ஜவான்" திரைப்படம் - கருத்து தெரிவித்து வரும் ரசிகர்கள்.

அதாவது இந்த “ஜவான்” படத்தின் கதைக்களம் நடிகர் விஜய்யின் வில்லு படத்தின் சாயலில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் இப்படத்தில் அப்பா ஷாருக்கான் ராணுவ அதிகாரியாக வருகிறாராம். பொதுவாக அட்லியின் முன்பு வெளியான தமிழ் படங்களின் சாயலில் இருக்கும் இப்படம் நடிகர் விஜய் படத்தை போல் உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.