Ajith 12 years of Billa
வலிமை அப்டேட் கூட வரவில்லை ஆனால் தல ரசிகர்கள் இந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் வலிமை. எச். வினோத் இயக்க உள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் இந்த படத்தின் அப்டேட்களுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அப்டேட் ஏதும் வந்தபாடில்லை. அப்படியிருந்தும் அஜித் ரசிகர்கள் இன்று உற்சாகமான கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

அதற்கான காரணம் என்னவென்றால் இன்று தல அஜித்தின் பில்லா திரைப்படம் வெளியாகி 12 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. இதனை தான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அஜித்தின் பில்லா படம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த ஒரு படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.