Fans Blast Vanitha Vijaykumar
Fans Blast Vanitha Vijaykumar

பீட்டர் பால் நான்வெஜ் சாப்பிடமாட்டார் டீட்டோடேலர் சொன்னிங்க இதுக்கு பேரு என்ன என வனிதா வெளியிட்ட வீடியோவில் அவரை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

Fans Blast Vanitha Vijaykumar: தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். பழம்பெரும் நடிகர் விஜயகுமார் மற்றும் நடிகையான மஞ்சுளா ஆகியோரின் மூத்த மகளான இவர் பெற்றோர்களைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

ஏற்கனவே 2 திருமணம் செய்த வனிதாவிற்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் வனிதா கடந்த ஜூன் 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. மேலும் வனிதா தன்னுடைய மூன்றாவது புருஷனான பீட்டர் பால் டீட்டோடேலர், நான் வெஜ் சாப்பிடவே மாட்டார் என கூறியிருந்தார்.

ஆனால் தற்போது அவருடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கேஎப்சி சிக்கன் தயாரித்து அதனை தன் கணவருக்கு ஊட்டி விடுகிறார்.

விஜய் டிவி டிடியை ஓங்கி அறைந்த தீனா – எத்தனை நாள் திட்டமோ?? – வைரலாகும் வீடியோ

இதனைப் பார்த்த நெட்டிசன்கள் அவர் டீட்டோடேலர் நான் வெஜ் சாப்பிட மாட்டார் என்று கதை கதையா விட்டீங்க. அப்ப இதுக்கு பேரு என்ன? என அவரை விளாசி எடுத்து வருகின்றனர்.

மேலும் வனிதா தன் வாயாலே கெட்டு விட்டதாகவும் கூறி வருகின்றனர்.

மேலும் சில ரசிகர்கள் அடுத்ததாக வனிதா இப்போது தான் முதல்முறையாக நான்வெஜ் சாப்பிட்டார் என கூறுவார் எனவும் கிண்டலடித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CCGkVRJjYLd/?igshid=1isibujreexzn
YouTube video