Losliya Latest Photoshoot
Losliya Latest Photoshoot

லாஸ்லியா வெளியிட்ட புகைப்படத்தின் காரணமாக ரசிகர்கள் அவரை கண்ட மேனிக்கு திட்டி தீர்த்து வருகின்றனர்.

Fans Blast Losliya Photo Caption : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வர தொடங்கி இருப்பவர் லாஸ்லியா. இலங்கையைச் சேர்ந்த ஈழத்துத் தமிழச்சியான இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு பிரபலமானார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓரிரு நாளிலேயே உலகம் முழுவதும் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. லாஸ்லியா ஆர்மி போன்றவைகள் உருவாக்கப்பட்டன.

தற்போது தமிழில் மூன்று படங்களில் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும் லாஸ்லியா சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

பிக்பாஸில் கிடைத்த புகழ்.. முதல் படத்திற்கு லாஸ்லியா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? தலைசுற்ற வைக்கும் தகவல்

இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு உங்களின் ஆன்மாவை மகிழ்ச்சிப் படுத்துங்கள் சமுதாயத்தை அல்ல என குறிப்பிட்டுள்ளார்.

இவருடைய இந்த வார்த்தைகள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனால் ரசிகர்கள் பலரும் லாஸ்லியாவை கண்டபடி திட்டி தீர்த்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CE_qF3iBSb5/?utm_source=ig_web_copy_link

அதேசமயம் லாஸ்லியாவின் கேப்ஷனுக்கு ஆதரவாகவும் ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

லாஸ்லியா என்ன அர்த்தத்தில் பதிவிட்டார் என்பது அவருக்கு தான் தெரியும்.