லியோ திரைப்படத்தின் தீம் பாடலான பிளடி ஸ்வீட் பாடலை பாடி அசத்திய சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அனிருத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத் ரவிச்சந்திரன். தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் இவர் தற்போது தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

இவரது இசையில் உருவாகி இருந்த இப்படத்தின் டைட்டில் ப்ரோமோ பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் அமெரிக்காவில் இப்படத்தின் டைட்டில் பாடலை சிறுவன் ஒருவன் அனிருத் முன்பு பாடி காண்பித்து அசத்தியுள்ளார்.

அதனை கண்டு ஆச்சரியத்தில் மூழ்கிய அனிருத் அச்சிறுவனை பாராட்டும் வகையில் தனது கண்ணாடியை அந்த சிறுவனுக்கு பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த அழகான காட்சியின் தருணம் இணையதளத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது.