kavin song2
பிக்பாஸ் வீட்டில் காதல் தோல்வி அடைந்துள்ள கவினுக்கு சோக பாடல் ஒன்றை நெட்டிசன்கள் உருவாக்கியுள்ளனர்.

Fan made video for biggboss kavin who lost love – பிக்பாஸ் வீட்டில் காதல் மன்னனாக வலம் வந்தவர் நடிகர் கவின். அபிராமி தொடங்கி சாக்‌ஷிக்கு வந்து பின் லாஸ்லியாவிடம் காதல் ரசம் சொட்ட சொட்ட பேசி வந்தார்.

முதல் சீசனில் ஓவியா-ஆரவ் காதல் போல் இந்த சீசனில் கவின் – லாஸ்லியா காதல் சமூக வலைத்தளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு வந்தது.

பிகிலுடன் கைதி மோதுவது ஏன்? விஜய் 64 எப்படி இருக்கும்? – லோகேஷ் கனகராஜ் அதிரடி பேட்டி

நேற்று பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த லாஸ்லியாவின் குடும்பம் காதலை விட்டுவிட்டு விளையாட்டை ஒழுங்காக ஆடு என அறிவுரை கூறினர்.

அதுவும் லாஸ்லியான் தந்தை மிகவும் கடுமையான உணர்ச்சிகளை காட்டினார். இதைக்கண்ட கவின் குற்ற உணர்ச்சில் குறுகிப்போனார். அவரை பலரும் தேற்றிய பின் சற்று இயல்பானார்.

இந்நிலையில், பைசா திரைப்படத்தில் யுவன்சங்கராஜா இசையமைத்த ‘ஏதோ ஒன்று என்னை தாக்க.. பாடலை ரீமிக்ஸ் செய்து, கவின் மற்றும் லாஸ்லியாவின் வீடியோக்களை இணைத்து நெட்டிசன்கள் அழகான ஒரு சோக கீத வீடியோவை உருவாக்கியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.