விஷாலின் மார்க் ஆண்டனி படத்தின் ரிலீஸ் குறித்த போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் அடுத்தடுத்து தொடர்ந்து படங்கள் வெளியாகி வருகின்றன. விஷால் நடிப்பில் வெளியான லத்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து மார்க் ஆண்டனி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வினோத்குமார் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படம் வெகு விரைவில் திரைக்கு வரும் என சொல்லப்பட்டு வரும் நிலையில் இந்தப் படம் ஜூலை 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது .

ஆனால் இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை எனவும் தெரிய வந்துள்ளது. படம் இந்த தேதியில் வெளியாக அதிக வாய்ப்புள்ள காரணத்தினால் ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர் எனவும் தெரிய வந்துள்ளது.

விரைவில் படக்குழு தரப்பிலிருந்து ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.