பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மேலும் ஒரு பிரபல வில்லன் நடிகர் இணைந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்தினம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயக்குவதற்கான முயற்சிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.

ஏற்கனவே இந்த படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, அபிதாப் பச்சன், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய் என பல நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்.

இவர்களை தொடர்ந்து மலையாள நடிகர் லால் என்பவரும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்திற்காக குதிரை ஓட்டுவதற்கான பயிற்சியை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். லால் ஏற்கனவே பல தமிழ் படங்களில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Lal Actor

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here