சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் சமையல் நிகழ்ச்சியில் விஜய் டிவியின் குக் வித் கோமாளி பிரபலம் இணைய போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் மக்களை கவர்ந்துள்ள நிகழ்ச்சியில் முதல் இடத்தில் இருக்கும் நிகழ்ச்சி தான் ‘குக் வித் கோமாளி”. இந்நிகழ்ச்சியின் மூலம் பல நட்சத்திரங்கள் பிரபலமாகியுள்ளனர். அதேபோல் இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்தான் இயக்குனர் அகத்தியனின் மகளான கனி. இவரை ரசிகர்கள் காரக்குழம்பு கனி என்று அன்போடு அழைப்பார்கள். இவர் குக் வித் கோமாளி சீசன் 2வில் டைட்டிலை தட்டி சென்றவர்.

சன் டிவியில் இணையப் போகும் குக் வித் கோமாளி பிரபலம் - யார் தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்.!

நடிகை விஜயலட்சுமி அக்காவான கனி குக்கிங் மற்றும் ஃபேஷன் டிசைனில் ஆர்வம் கொண்டவர். இவர் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படத்திற்காக ஆடை வடிவமைத்து கொடுத்துள்ளார். அதோடு தனது youtube சேனலில் விதவிதமான ரெசிபிகளை சமைத்துக் காட்டி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

சன் டிவியில் இணையப் போகும் குக் வித் கோமாளி பிரபலம் - யார் தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்.!

இவ்வாறு ரசிகர்களிடம் பிரபலமான இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் சமையல் நிகழ்ச்சியில் தொகுப்பாலினியாக இணைய உள்ளார் என்ற லேட்டஸ்டான தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து உறுதியான தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.