
Sarkar Theater : படங்களில் மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் விஜய் முதலில் இதை பழக வேண்டும் என பிரபல தியேட்டர் உரிமையாளர் ட்வீட் செய்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்கார் படம் நாளை முதல் திரைக்கு வருகிறது.
கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு, ராதா ரவி ஆகியோருடன் விஜயுடன் இணைந்து நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
நாளை வெளியாக உள்ள இந்த படத்திற்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். பல்வேறு தியேட்டர்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஹவுஸ் புல்லாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது தஞ்சாவூராவை சேர்ந்த பிரபல திரையரங்கம் ஒன்று பதிவு செய்துள்ள டீவீட்டில் படத்தை வெளியிடும் விநியோகிஸ்தர் இரண்டு நாட்களுக்கு டிக்கெட்டை பிளாக்கில் அதிக விற்பனை செய்ய வலியுறுத்தியதாக கூறியுள்ளார்.
இதனால் நாங்கள் எங்களது தியேட்டரில் சர்கார் படத்தை வெளியிட மாட்டின் என மறுத்து விட்டதாக கூறியுள்ளார்.
மேலும் விஜய் படங்களில் அறிவுரை சொன்னால் போதாது, நிஜத்திலும் அதனை பின்பற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளது.
This is the case of all theatres across Tamil Nadu.@ThanthiTV @PTTVOnlineNews @news7tamil @News18TamilNadu https://t.co/cP4IbUY7ie
— Ranee Paradise 4K 3D AC DTS (@4kRanee) November 3, 2018