இணையத்தில் வைரலாகி வரும் பிரபல பின்னணி பாடகியான ஸ்வாகதா கிருஷ்ணனின் “நகராதே” என்ற ஆல்பம் பாடல்.

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி  பாடகிகளில் ஒருவர் தான் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் பேச்சுலர், ஜோம்பி, நோட்டா, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உள்பட பல படங்களில் உள்ள பாடல்களைப் பாடி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து இவர் “இன்ட்ரோ” என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

வைரலாகும் பிரபல பின்னணி பாடகியின் "நகராதே" பாடல்.

இந்நிலையில் இவர் “நகராதே” என்ற ஒரு ஆல்பம் பாடலை பாடியுள்ளார். மேலும் இதில் தொகுப்பாளர் மாதேவுடன் இணைந்து இப்பாடலில் நடித்தும் இருக்கிறார். “நகராதே” என்று தொடங்கும் இந்த பாடலை நிவாஸ் கே.பிரசன்னாவுடன் இணைந்து ஸ்வாகதா பாடியுள்ள இந்தப்  பாடலை பாடலாசிரியர் கு.கார்த்திக் எழுத, அஷ்வின் ராஜ் இசையமைத்துள்ளார். 

வைரலாகும் பிரபல பின்னணி பாடகியின் "நகராதே" பாடல்.

நாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்பாடலை வட்டல் ஸ்டியோஸ் தயாரித்துள்ளது. ஜூன் 24-ஆம் தேதியில் வெளியான இந்தப் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமின்றி இணையத்தில் வைரலாகியும் வருகிறது.

Nagaraathey - Tamil Music Video| Maathevan, Swagatha S. Krishnan| Nivas K Prasanna| Nash| Ashwin Raj