திரையுலகில் நடிகர் நடிகைகளாக உள்ள கமல்ஹாசன், சூர்யா, அரவிந் சாமி, சிம்ரன், ரோஜா மற்றும் பல நடிகர் நடிகைகள் நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக சின்னத்திரையிலும் அறிமுகமாகி உள்ளனர்.

தற்போது கமல்ஹாசன் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ள விஷாலும் தற்போது சின்னத்திரையில் அறிமுகமாகியுள்ளார்.

சன் டிவியில் புதியதாக ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சியை தான் விஷால் தொகுத்து வழங்க போகிறார். அதற்கான ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.