வாரிசு படத்தில் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா பற்றி பிரபல இயக்குனர் அளித்திருக்கும் பேட்டி வைரல்.

தென்னிந்திய திரை உலகில் இளைய தளபதியாக வலம் வருபவர் விஜய். இவர் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க பல திரை பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தில் ராஜு தயாரிப்பில் தமன் இசையில் உருவாகியுள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வெளியாக உள்ளது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருக்கும் பேரரசு அவர்களின் சமீபத்திய பேட்டி வைரலாகி வருகிறது.

அப்பேட்டியில் இயக்குனர் பேரரசிடம் செய்தியாளர் ஒருவர் வாரிசு படத்தின் பாடலை கேட்டீர்களா என கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு இயக்குனர் பேரரசு, வாரிசு பாடல் கேட்டேன் அருமையாக இருந்தது. விஜய்க்கு பலர் ஜோடியாக நடித்து விட்டாலும் சிலர் மட்டுமே நல்ல ஜோடியாக விளங்குகின்றனர். அந்த வகையில் திருப்பாச்சி படத்தில் திரிஷா, நண்பனில் இலியானா ஜோடி நன்றாக இருந்தது. அதற்குப் பிறகு வாரிசு படத்தில் விஜய்க்கு ராஷ்மிகாவுடனான ஜோடி நன்றாக உள்ளது என்று கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.