சீனு ராமசாமி என் மகன் என்று நெகிழ்ச்சியுடன் அவரை புகழாரம் சூட்டியுள்ளார் பிரபல இயக்குனர் பாரதிராஜா. இந்தத் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

” தர்மதுரை” படத்திற்கு பிறகு இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில்  விஜய் சேதுபதி நடித்துள்ள படம்தான் “மாமனிதன்”. இந்தத் திரைப்படத்தை ஒய் எஸ் ஆர் பிலிம்ஸ் சார்பாக யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

 தமிழ்நாடு மற்றும் கேரளாவில் ஸ்டுடியோ 9 சார்பில் ஆர்கே சுரேஷ் வெளியிட்டுள்ள இந்த “மாமனிதன்” திரைப்படம் ஜூன் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இந்தத் திரைப்படம் தொடர்ந்து பலரின் பாராட்டுக்களை குவித்து வருகிறது. சமீபத்தில் இந்த படத்தை பார்த்த இயக்குனர் சங்கர் அவர்கள் தனது இணையதளத்தில் மூலம் இப்படத்தை பாராட்டி பதிவிட்டிருந்தார்.

அந்த வகையில் தற்போது தமிழில் ‘என் இனிய தமிழ் மக்களே’ என்று அனைவரின் கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு படங்களை இயக்கியிருக்கும் மாபெரும் இயக்குனரான பாரதிராஜா அவர்கள் இப்படத்தை பாராட்டியுள்ளார். மேலும் நெகிழ்ச்சியுடன் “சீனுராமசாமி என் மகன்” எனப் புகழாரம் சூட்டியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.