வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை திரைப்படத்தில் இணைந்திருக்கும் பிரபல இயக்குனர் குறித்த புகைப்படம் வெளியாகி உள்ளது.

கோலிவுட் திரை வட்டாரத்தில் பிரபல முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி. இவர் தற்போது முதல் முறையாக கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் விடுதலை. இப்படத்தை பிரபல இயக்குனரான வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி முரட்டுத்தனமாக நடித்து வருகிறார்.

இளையராஜா இசையில் உருவாகும் இப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வரும் நிலையில் இதில் பிரபல இயக்குனர் ஒருவர் இணைந்து இருப்பதாக புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் பிரபல இயக்குனரான கௌதம் மேனன் நடித்து வருவதாக புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் கௌதம் மேனன் நடிப்பதால் இதற்கு முன்பு பார்த்திராத கௌதம் மேனனை இப்படத்தில் காணலாம் என்று ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.