வாரிசு திரைப்படத்தின் பாடல் மூலம் இசையமைப்பாளர் தமனின் ஐந்து வருட கனவு நிறைவேறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய திரை உலகில் இளைய தளபதி ஆக வளம் வருபவர் தான் விஜய். இவர் தற்போது வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் உருவாகி இருக்கும் “வாரிசு” திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க சரத்குமார், யோகி பாபு, குஷ்பூ, பிரபு, சங்கீதா, ஷாம், ஸ்ரீகாந்த் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தில்ராஜ் தயாரிப்பில் தமன் இசையில் உருவாகி வரும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.

வாரிசு படம் மூலம் 5 ஆண்டு கனவு நிறைவு!!… இசையமைப்பாளர் தமன் குறித்த பதிவு வைரல்!.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ரஞ்சிதமே என்ற பாடலின் ப்ரோமோ வீடியோ நேற்றைய தினம் வெளியாகி வைரலானது. தற்போது இப்படத்தில் இசையாமைத்ததன் மூலம் இசையமைப்பாளர் தமன் தனது 5 வருட கனவை நிறைவேற்றி இருக்கிறார். அதாவது, இசையமைப்பாளர் தமன் கடந்த 2017ல் தான் இசையமைக்கும் பாடலுக்கு நிச்சயம் விஜய்யை பாடவைப்பதாக கூறியிருந்தார். அதன்படி தற்போது வாரிசு திரைப்படத்தில் ரஞ்சிதமே என்ற பாடலின் மூலம் அதனை நிறைவேற்றி இருக்கிறார். அப்பாடலை விவேக் எழுதி தமன் இசையமைக்க விஜய் பாடியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாரிசு படம் மூலம் 5 ஆண்டு கனவு நிறைவு!!… இசையமைப்பாளர் தமன் குறித்த பதிவு வைரல்!.