நயன்தாராவின் திருமண கோலத்தை போல் உடை அணிந்து ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய பிரபல நகைச்சுவை நடிகையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருக்கும் நயன்தாரா கடந்த ஜூன் 9ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை காதல் திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணத்தில் நயன்தாரா சிவப்பு நிற எம்பிராய்டரி சேலை அணிந்திருந்தார். அதில் கர்நாடக கோவில்களில் இடம்பெற்றுள்ள கலை வடிவங்கள் எம்பிராய்டு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.

நயன்தாராவின் திருமண கெட்டப்பில் பிரபல காமெடி நடிகை - அதிர்ச்சியோடு கண்டு களிக்கும் ரசிகர்கள்.

மேலும் அவர் வைடூரியம், வைரம் மற்றும் மரகத கற்களால் ஆன நகைகளை அணிந்திருந்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வந்தது. இந்நிலையில் அதனை பிபி ஜோடியில் கண்டஸ்டண்டாக கலந்து கொண்டிருக்கும் பிரபல வெள்ளித்திரை காமெடி நடிகையான ஆரத்தி கணேஷ் நயன்தாராவின் திருமண கோலத்தை ரீ கிரியேட் செய்துள்ளார்.

நயன்தாராவின் திருமண கெட்டப்பில் பிரபல காமெடி நடிகை - அதிர்ச்சியோடு கண்டு களிக்கும் ரசிகர்கள்.

அதாவது நயன்தாராவை போல சிவப்பு நிற எம்பிராய்டரி சேலை, ஃபுல் ஸ்லீவ் ஜாக்கெட், நகைகள் போன்று அணிந்து புதிய கெட்டப்பில் புகைப்படம் ஒன்றை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதோடு என்ன கொடுமை சார் இது?… எக்ஸ்பெக்டேஷன் அண்ட் ரியாலிட்டி? என்று புகைப்படத்தின் கீழ் காமெடியான கேப்ஷன் கொடுத்து பகிர்ந்திருக்கிறார். இதனைப் பார்த்த அதிர்ச்சியான ரசிகர்கள் அப்புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.