பிரபல நகைச்சுவை நடிகரான மதுரை முத்துக்காளை அவர்கள் அளித்துள்ள பேட்டியில் நடிகர் விஜயின் வளர்ச்சி குறித்த சுவாரசியமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

இந்திய திரை உலகில் முன்னணி ஹீரோவாக திகழ்ந்திருப்பவர் தான் விஜய். இவர் தற்பொழுது தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கிக் கொண்டிருக்கும் “வாரிசு” திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், சங்கீதா, ஸ்ரீகாந்த், பிரபு போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இப்படம் அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது.

விஜயின் வளர்ச்சி குறித்து பேட்டியளித்த பிரபல காமெடி நடிகர்!!… சுவாரசியமான தகவல் வைரல்.

இப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இது தொடர்பான பல சுவாரசியமான தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவ்வப்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் நிலையில் தற்போது நடிகர் விஜய் குறித்து பிரபல காமெடி நடிகர் மதுரை முத்துக்காளை அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது.

விஜயின் வளர்ச்சி குறித்து பேட்டியளித்த பிரபல காமெடி நடிகர்!!… சுவாரசியமான தகவல் வைரல்.

கோலிவுட் திரை வட்டாரத்தில் பிரபல முன்னணி காமெடி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர்தான் மதுரை முத்துக்காளை. இவர் கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் போன்ற பல முன்னணி காமெடி ஜாம்பவான்களுடன் நடித்து பல ரசிகர்களுக்கு பரிச்சயமான இவர் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் தளபதி விஜயின் வளர்ச்சி குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

விஜயின் வளர்ச்சி குறித்து பேட்டியளித்த பிரபல காமெடி நடிகர்!!… சுவாரசியமான தகவல் வைரல்.

அதில் அவர், விஜய்யின் இந்த வளர்ச்சிக்கு அவரின் கடின உழைப்பே காரணம். அவர் தன் தந்தையால் சினிமாவிற்கு வந்தார் என சில விமர்சனங்கள் இருந்தாலும் அவரின் திறமையாலும் உழைப்பாலும் தான் இந்த நிலைக்கு வந்திருக்கின்றார். விஜய் படப்பிடிப்பு தளத்தில் எப்போதுமே அமைதியாக தான் இருப்பார். வசனம், நடனம், சண்டை காட்சிகள் என அனைத்தையும் உன்னிப்பாக கவனித்து ஒரே சாட்டில் அசத்தி விடுவார். அவர் தன் மனதிற்குள் காட்சிகளை ரிகர்சல் செய்வதால் தான் அமைதியாக இருக்கின்றார் என நினைக்கிறேன் எனக் கூறியுள்ளார். இந்த தகவல் தற்பொழுது விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.