Famous Ajith Director Interview About Thalapathy Vijay.! | Thala Ajith | Kollywood Cinema News | Trending Cinema News | Director P Vasu
விஜய்க்கு பயமோ என்னமோ அதான் என் படத்தில் நடிக்கவில்லை என தல பட இயக்குனர் ஒருவர் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் இன்றைய இருபெரும் துருவங்கள் என்றால் அது அஜித்தும் விஜயும் தான். இவர்களின் படங்கள் தான் தற்போது தமிழ் திரையுலகையே மாறி மாறி ஆண்டு வருகின்றன.

தல அஜித்தை வைத்து சில வருடங்களுக்கு முன்னர் பரமசிவம் என்ற படத்தை இயக்கி இருந்தவர் பி.வாசு. இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தல அஜித் மற்றும் விஜய் குறித்து பேசியுள்ளார்.

பாலிவுட்டில் இருந்து காப்பியடிக்கப்பட்ட பிகில் போஸ்டர் – ஒரிஜினல் போஸ்டர் இதோ.!

அப்போது ஏன் விஜயுடன் இணைந்து பணியாற்றவில்லை என கேட்டுள்ளனர். அதற்கு அவர் நானும் விஜயும் மெர்சல் படத்திற்கு பிறகு இணைந்து பணியாற்ற இருந்தோம். அதுவும் ஒரு அரசியல் கதை தான்.

விஜய் நிச்சயம் இணைந்து பணியாற்றலாம் என கூறினார். கூடவே எப்போது என்று நானே சொல்கிறேன் எனவும் கூறினார்.

இன்று வரை அவர் அந்த படம் பற்றி பேசவே இல்லை. அவர் நான் ஷூட்டிங்கின் போது நடந்து கொள்ளும் விதத்தை பார்த்திருக்கலாம்.

தர்பார் ஹிட்டாகுமா? ஆகாதா? – ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பாலாஜி ஹாசன்.!

அதனால் அவருக்கு என் மீது பயம் ஏற்பட்டு இருக்கலாம். அந்த பயம் கூட என்னுடைய படத்தை தள்ளி போட காரணமாக இருக்கலாம் என கூறியுள்ளார்.

Director P Vasu
Director P Vasu
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.