படப்பிடிப்பிற்காக மும்பை சென்றுள்ள தனுஷ் பிரபல நடிகைகளான பிரியாமணி மற்றும் ஜெனிலியாவை நேரில் சந்தித்தபோது புகைப்படம் எடுத்துள்ளார். அது தற்போது வைரலாகியுள்ளது.

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை தனது திரைப்பயணத்தை விரிவுபடுத்தி அனைவருக்கும் ரோல் மாடலாக மாறி இருக்கும் நடிகர் தான் தனுஷ். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ள நிலையில் அடுத்ததாக இவரது நானே வருவேன் மற்றும் வாத்தி திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளது.

மும்பையில் தனுஷை சந்தித்த இரண்டு பிரபல நடிகைகள்!!… யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம் இதோ.

இதை அடுத்து நடிகர் தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்காக சில நாட்களுக்கு முன்னர் மும்பைக்கு சென்றுள்ள தனுஷ் நடிகை பிரியாமணி, ஜெனிலியா மற்றும் ஜெனிலியாவின் கணவரான ரித்தேஷ் தேஷ் மூக் ஆகியோரை நேரில் சந்தித்துள்ளார். அப்போது அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் நடிகை பிரியாமணி தனுஷ் உடன் இணைந்து அது ஒரு கனா காலம் என்ற படத்திலும் நடிகை ஜெனிலியா உத்தமபுத்திரன் படத்திலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மும்பையில் தனுஷை சந்தித்த இரண்டு பிரபல நடிகைகள்!!… யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம் இதோ.