Varalaxmi SarathKumar Tweet

Varalaxmi SarathKumar Tweet : முருகதாஸ் சொல்வது உண்மையா? சர்கார் கதை விவகாரம் குறித்து பிரபல நடிகையான வரலட்சுமி சரத்குமார் ட்வீட் செய்துள்ளார்.

முருகதாஸ் இயக்க தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார்.

இந்த படத்தின் கதை குறித்த விவகாரம் திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் நடித்துள்ள வரலட்சுமி சரத்குமார் இந்த விவகாரம் குறித்து ட்வீட் செய்துள்ளார்.

அந்த டீவீட்டில் என்னுடைய ஆதரவு எப்போது என்னுடைய இயக்குனர் முருகதாஸ் சாருக்கு தான். உண்மை நிட்சயம் வெல்லும். அனைத்திற்கும் காலம் பதில் சொல்லும் எனவும் கூறியுள்ளார்.

ஏற்கனவே தளபதி ரசிகர்கள் #WeStandWithARMurugadoss என ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து தங்களது ஆதரவை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.