தளபதி விஜய் நேற்று சென்னையில் நடந்த சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பேச்சு தான் தற்போது சமூக வலையாதளங்களில் செம ட்ரெண்டிங்.

பன்ச் டைலாக், சின்ன கதை, கலாய், அரசியல் என அத்தனையும் பேசி அரங்கை அதிர வைத்தார். தற்போது இது பற்றி நடிகை கஸ்தூரி ட்விட்டரில் கருத்தை பதிவு செய்துள்ளார்.

முதலில் விஜய் பேச தொடங்கிய போது யாரோ எழுதி கொடுத்து தான் பேசுகிறாரோ என்ற சந்தேகம் எழுந்தது.

அதன் பின்னர் அரசியல் காந்திஜியை பற்றி பேசியதும் உள் மனதில் இருந்து தான் பேசுகிறார் என்பது நன்றாக தெரிந்தது.

விஜயின் அதிரடியான இந்த பேச்சை சன் டிவியே எதிர்பார்த்து இருக்காது என டீவீட்டியுள்ளார்.