நண்பர்களையும், ரசிகர்களையும் விட்டுக் கொடுக்காமல் இருக்கும் யோகி பாபுவை மனம் திறந்து பாராட்டி நடிகர் நிதின்சத்யா பதிவிட்டு இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக உயர்ந்துள்ளவர்தான் யோகி பாபு. ரஜினி,விஜய், அஜித் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் தற்போது காமெடியனாகவும், கதாநாயகனாகவும் உயர்ந்து இருக்கிறார். இவர் கைவசமாக நிறைய படங்களை வைத்துக்கொண்டு நடித்துக் கொண்டிருக்கிறார்.

யோகி பாபுவை பாராட்டிய பிரபல நடிகர்.. வைரலாகும் பதிவு.

அண்மையில் யோகி பாபுவின் ஒரு பதிவு இணையத்தில் வைரலானது. அதில் ஒரு போஸ்டர் ஒன்றை பதிவிட்டு இப்படத்தில் கதாநாயகனாக நண்பர் நிதின்சத்யா நடித்துள்ளார். நான் நான்கு காட்சிகள் மட்டுமே இப்படத்தில் நடித்துள்ளேன். தயவு செய்து இது போன்ற விளம்பரம் செய்யாதீர்கள், நன்றி என்று குறிப்பிட்டு பதிவினை வெளியிட்டிருந்தார்.

யோகி பாபுவை பாராட்டிய பிரபல நடிகர்.. வைரலாகும் பதிவு.

இப்பதிவை பார்த்த பலரும் யோகி பாபுவை பாராட்டி வந்த நிலையில் தற்போது இது குறித்து நடிகர் நிதின் சத்தியன் ‘ஒரு நண்பனை விட்டுகுடுக்காம ரசிகர்களையும் விட்டுகுடுக்காம அந்த மனசு தான் யோகிபாபு’ என்று மனம் திறந்து பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.