பெற்ற மகளை அடித்து துன்புறுத்திய நடிகர்

பெற்ற மகளை அடித்து துன்புறுத்திய நடிகர் : தான் பெற்ற மகளையே அடித்து துன்புறுத்தியுள்ளார் பிரபல கன்னட நடிகரான துனியா விஜய்.

கன்னட சினிமாவில் நடிகராக வலம் வருபவர் துனியா விஜய். இவருடைய முதல் மனைவி நாகரத்னா. இவர்களுக்கு இரண்டும் மகள் ஒரு 1 மகன் உள்ளனர்.

மேலும் துனியா விஜய் தன்னுடைய மனைவியுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் விவாகரத்து செய்து விட்டு கீர்த்தி என்பவரை கடந்த 2016-ல் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் முதல் மனைவியின் மகளான மோனிஷா சமீபத்தில் விஜயின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கீர்த்தியும் அவரது நண்பர்களும் சேர்ந்து மோனிஷாவை திட்டியுள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் துனியா விஜய் பெத்த மகள் என்றும் பார்க்காமல் அவரை அடித்து உதைத்துள்ளார். இதனால் காயமடைந்த மோனிஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் தன்னுடைய தந்தையான துனியா விஜய் மீதும் போலீசில் புகார் அளித்துள்ளார்.

பெற்ற மகளை அடித்து துன்புறுத்திய நடிகர்