Family Health Insurance
Family Health Insurance

Family Health Insurance – சென்னை: ‘மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், ஓராண்டுக்கு வழங்கப்படும் ரூ.2 லட்சம் வரையிலான மருத்துவ காப்பீட்டு தொகை, தற்போது ரூ.5 லட்சம் உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்’ .

இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டில் ஏழை, எளிய மக்களுக்கும், உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், 2012-ஆம் ஆண்டு ஜன.11-ஆம் தேதி,

அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா அம்மா அவர்கள், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் என்ற பெயரில் இத்திட்டத்தை தொடங்கினார் .

இத்திட்டத்தில் இதுவரை சுமார் 26.96 லட்சம் நபர்கள் , இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.

மேலும், இந்த திட்டத்தில் 1.58 கோடி குடும்பங்களுக்கு காப்பீடு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதலமைச்சரின் இந்த மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் பயன்பெறும் பயனாளிகள்,மேலும் பல்வேறு மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்வதற்காக,

தற்போது வழங்கப்பட்டு வரும் 2 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ காப்பீட்டு தொகையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், கோரிக்கையை பரிசீலனை செய்தபின், 2 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டு தொகையை தற்போது 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளேன்.

இந்நிலையில், வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1.58 கோடி குடும்பங்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டுத் தொகைக்கு கட்டணமில்லாமல் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்” இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.