Familiar Actor Interview About Master
Familiar Actor Interview About Master

தளபதி விஜயின் சினிமா வாழ்க்கையை மாஸ்டர் திரைப்படம் புரட்டிப்போடும் என பிரபல நடிகர் ஒருவர் அளித்துள்ள பேட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

Familiar Actor Interview About Master : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ஆண்ட்ரியா, ரம்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஏப்ரல் 9ம் தேதி இப்படத்தை படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது. ஆனால் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளிப் போய் வருகிறது.

இன்ஸ்டாகிராமில் 30 நிமிட பேட்டி கொடுக்க பணம் கேட்ட மீரா மிதுன், அதுவும் எவ்வளவு தெரியுமா?? அம்பலமான ஆதாரம்

இந்த நிலையில் தற்போது மாஸ்டர் படத்தில் விஜயுடன் இணைந்து நடித்துள்ள நடிகர் ஒருவர் அளித்துள்ள பேட்டியில் ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளது.

அதாவது மாஸ்டர் திரைப்படம் தளபதி விஜயின் திரை திரைப்பயணத்தில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும் என கூறியுள்ளார். மேலும் அவர் நடித்த சிறந்த ஐந்து படங்களில் மாஸ்டர் திரைப்படம் முதலிடத்தை பெறும். அந்த அளவிற்கு இப்படம் வெறித்தனமாக உருவாகியுள்ளது எனக் கூறியுள்ளார்.