Fair And Lovely New Name
Fair And Lovely New Name

ஃபேர் அண்ட் லவ்லி நிறுவனம் திடீரென தன்னுடைய பொருளின் பெயரை மாற்றியுளளது.

Fair And Lovely New Name : கருப்பாக இருப்பவர்கள் வெள்ளையாக மாறுவதற்காக பல பொருட்கள் சந்தையில் விற்பனையாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக பெண்கள் விதவிதமான க்ரீம்களை பயன்படுத்துவது உண்டு.

பெரும்பாலான பெண்கள் நம்புவது ஃபேர் அண்ட் லவ்லி என்ற க்ரீமை தான். இந்த பெயர் நெல்லை தான் அழகு என்பதை குறிக்கும் வகையில் உள்ளது.

இதற்கு கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றது. வெள்ளை மட்டும் அழகல்ல கருப்பும் அழகுதான் என பலரும் கூறி வருகின்றனர்.

கொரோனாவை ஒழிக்க 58 பசுக்களுடன் மெகா கோ பூஜை நடத்திய PT செல்வகுமார் – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

இதன் காரணமாக தற்போது அந்நிறுவனம் பேர் அண்ட் லவ்லி என்ற பெயரிலிருந்து ஃபேர் என்ற வார்த்தையை நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து நடிகை நந்திதா தாஸ் ஃபேர் என்ற வார்த்தையை நீக்கியது வரவேற்கத்தக்க ஒன்று. இது ஒரு நல்ல முன்னெடுப்பு என கூறியுள்ளார்.

இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு வெள்ளை மட்டும் அழகல்ல கருப்பு அழகு தான் என பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் மட்டுமல்லாமல் இன்னும் பல நடிகைகள் இந்த முயற்சிக்கு வரவேற்பு அளித்துள்ளனர்.