Facial drought in winter :
Facial drought in winter :

Facial drought in winter :

1. தினமும் கை, கால், முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி ,மென்மையான துணி கொண்டு துடைக்க வேண்டும். பின்பு ரோஸ் வாட்டரை ,மாய்ஸ்சுரைசிங் லோசனுடன் சேர்த்து முகம், கழுத்து கை, கால்களில் தடவ வேண்டும்.

2. தேனில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. தேனை ஒரு காட்டனில் நனைத்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும் .இவ்வாறு செய்தால் முகத்தில் ஏற்பட்ட சரும வறட்சி நீங்கி இளமையுடன் காட்சியளிக்கும்.

3. நன்கு மசித்த வாழைப்பழத்துடன் , ஒரு ஸ்பூன் தேனைக் கலந்து முகம் கழுத்துப் பகுதியில் தடவி பத்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும் இவ்வாறு செய்து வந்தால் சருமம் மென்மையாக காட்சியளிக்கும்.

4. ஒரு ஒரு ஸ்பூன் பால், ஒரு ஸ்பூன் முல்தானி மெட்டி பவுடர் ,இதனுடன் 2 டேபிள்ஸ்பூன் பப்பாளி பழ பேஸ்ட் இவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவேண்டும்.

5. தேன், முல்தானி மட்டி ,தக்காளி சாறு இவற்றை ஒன்றாக சேர்த்து பசை போல செய்து முகத்தில் பூசிக் கொள்ள வேண்டும். பதினைந்து நிமிடம் கழித்து முகத்தை கழுவிக் கொள்ள வேண்டும்.

6. முல்தானிமெட்டி பவுடருடன் கேரட்டை கலந்து முகத்தில் தடவவேண்டும் 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

7. தினமும் குளிப்பதற்கு முன்பு முகம் ,கை கால் பகுதிகளில் தேங்காய் எண்ணையை நன்றாக சூடு பறக்க தேய்க்க வேண்டும் .15 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும்.

இவ்வாறு செய்து வந்தால் பனிகாலங்களில் ஏற்படும் வறண்ட வெண்மையான திட்டு ஏற்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here