
நடிகர் விவேக், நடிகை தேவயானி மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியாகி இருந்த எழுமின் படத்தின் எதிரொலியாக தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கல்வியையும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பையும் மையமாக கொண்டு உருவாகி இருந்ததால் எழுமின் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பாராட்டும் வரவேற்பும் கிடைத்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது அடுத்த வாரம் முதல் பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு கராத்தே போன்ற தற்காப்பு கலைகளுக்கான பயிற்சி அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பால் எழுமின் படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது.