Eye Problems :
Eye Problems :

Eye Problems :

மாலைக்கண் நோய் பற்றி தெரியுமா உங்களுக்கு?

☆ மாலைக்கண் நோய் இருப்பவர்களுக்கு சூரியன் மறைந்ததும் கண் தெரியாமல் போகும்.

☆ மாலைக்கண் நோய் உள்ளவர்களுக்கு பிரகாசமான வெளிச்சம் இருந்தால் மட்டுமே அவர்களால் பொருள்களை நன்றாகப் பார்க்க முடியும்.

☆ மாலைக்கண் நோய் ஏற்படுவதற்குக் காரணம் வைட்டமின்‘ஏ’ பற்றாக்குறைதான். குழந்தைகளுக்கு மூன்று வயது முதலே பால், கீரை, பப்பாளி, கேரட், மீன், மூட்டை, பழங்கள் கொடுத்து வந்தால் கண் சம்பந்தப்பட்ட எல்லா நோய்களையும் தவிர்த்துவிடலாம்.

☆ மாலைக்கண் நோய் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்.

☆ மாலைக்கண் நோய் குணமாக மூக்கிரட்டை இலை,பொன்னாங்கன்னி இலை,கீழாநெல்லி பொடி இவற்றை சம அளவு கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.

☆ அடர் பச்சைக் கீரை வகைகளான முருங்கைக் கீரை, தண்டுக் கீரை, வெந்தய கீரை, பருப்புக் கீரை மற்றும் பழங்கள், கேரட், மஞ்சள் பூசணி, மாம்பழம், பப்பாளி ஆகியவற்றில் அதிக அளவில் கரோட்டின் உள்ளது.

☆ கரோட்டின் அதிகம் உள்ள பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள். கண்பார்வை பிரச்சனையை தவிர்த்து விடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here