Eye Problem : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

Eye Problem :

* அடிக்கடி கண்ணீர் சிந்துபவர்கள் எல்லாம் பலவீனமானவர்கள் என்று எண்ணிவிடக்கூடாது. இதற்கு மருத்துவ ரீதியாக பல காரணங்கள் உண்டு. கண்ணீர் கசிந்து கொண்டே இருப்பதற்கான காரணங்களையும் அதற்கான தீர்வுகளையும் பார்ப்போம்.

* காரணங்கள்:

1) கண்களையும் மூக்கையும் இணைக்கும் ஒரு குழாய் தான் கண்ணீரை இறுக செய்யும். இந்த செயல் நடைபெறாத பட்சத்தில் அதிக அளவில் கண்ணீர் வரும்.

2) கண்களின் கீழ் இமைகள் உள்பக்கமாக இருந்தாலும் வெளிப்பக்கமாக இருந்தாலும் ஓரளவு உள்ளடங்கி இருந்தாலும் அதிக அளவில் கண்ணீர் வரும்.

3) கண்களின் வறட்சியும் ஒரு முக்கியமான காரணமாகும். கண்கள் வறண்டு போவதால் லாக்ரிமல் கிளாண்ட் என்னும் கண்ணீர் சுரப்பி இன்னும் அதிகமாக வேலை செய்யும்.

அதிக நேரம் ஏ.சியில் இருப்பவர்களைப் பாதிக்கும், உலர் கண்கள் பிரச்சனையா? தீர்வு என்ன?

4) கண் இமைகளை சுற்றியுள்ள தசைகள் சரியாக வேலை செய்யாவிட்டாலும் கண்ணீர் கசியலாம்.

5) ஒவ்வாமை காரணமாகவும் சிலருக்கு கண்ணீர் கசிந்து கொண்டே இருக்கலாம். சிலருக்கு ஏசியில் இருக்கும் போது கண்கள் அளவிற்கு அதிகமாக வறட்சி அடைவதால் கண்ணீர் கசியும்.

6) வெளிச்சத்தைப் பார்த்துக் கண்ணீர் கொட்டினாலும் சூரிய ஒளி அல்லது சக்திவாய்ந்த ஒளியை பார்க்கின்றபோது கண்ணீர் கசிந்து கூடவே கண்கள் சிவந்து இருந்தாலோ அவற்றை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக கவனிக்க வேண்டும்.

மேற்கண்ட பிரச்சனைகள் எதுவானாலும் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here