Explaination About Actress Losliya Marriage

நடிகை லாஸ்லியாவுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக வெளியான தகவல் குறித்து விளக்கம் வெளியாகியுள்ளது.

Explaination About Actress Losliya Marriage : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக லாஸ்லியா.

தற்போது ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக பிரெண்ட்ஷிப், ஆரிக்கு ஜோடியாக ஒரு படத்திலும், அறிமுக நடிகருக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இப்படியான நிலையில் நடிகை லாஸ்லியாவுக்கு அவருடைய அப்பாவின் நண்பர் மகனுடன் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் பரவியது.

தற்போது இந்த தகவல் குறித்து நாஸியா தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது தனக்கு திருமணம் என பரவிய தகவல் உண்மை அல்ல அது முழுக்க முழுக்க வதந்தி என கூறப்பட்டுள்ளது.

இதனால் லாஸ்லியா ஆர்மியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். லாஸ்லியாவை தொடர்ந்து பல படங்களில் நாயகியாக பார்க்க ஆசைப்படுவதாக தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.