நட்சத்திரம் நகர்கிறது படத்தின் புகைப்படங்களை எக்ஸ்க்ளூசிவாக படகுழு வெளியிட்டுள்ளது.

கோலிவுட் திரை வட்டாரத்தில் பிரபல முன்னணி இயக்குனர்களின் ஒருவராக திகழ்ந்தவர் தான் பா.ரஞ்சித். பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த இவர் நட்சத்திரம் நகர்கிறது என்ற வித்தியாசமான காதல் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் இந்தப் படத்தில் கலையரசன், ஹரி கிருஷ்ணன், டான்சிங் ரோஸ் ஷபீர் கல்லாரக்கல் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டென்மா இசையமைப்பாளராகவும், முரளி ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

LGBTQ சமூகத்தை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியிருப்பதாகத் தெரிகிறது. இந்நிலையில் நட்சத்திரம் நகர்கிறது படத்திலிருந்து புகைப்படங்கள் எக்ஸ்க்ளூசிவாக வெளியாகியுள்ளது. அது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.