Exclusive & Lovley Interview With Sshivada

YouTube video

Eshwaran Trailer Release Update : தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக வரும் பொங்கல் விருந்தாக ஜனவரி 14ஆம் தேதி ஈஸ்வரன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறனர். இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி இருந்த நிலையில் தற்போது டிரைலர் எப்போது வெளியாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது.

அதாவது வரும் ஜனவரி 9ஆம் தேதி சனிக்கிழமையன்று இந்த படத்தின் டிரைலர் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ஜனவரி 14ஆம் தேதி படம் ரிலீஸாக உள்ளதால் ஜனவரி 9ஆம் தேதி படத்தின் டிரைலரை வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள திரைப்படமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.