குணசேகரன் குடும்பத்திற்கு அரசு மற்றும் அருண் என இருவரும் அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இது குறித்த வீடியோவில் அதான் சொத்துல 5 பங்கு இருக்கு இல்ல என அரசு சொல்ல அருண் அண்ணாவோட முடிவுல எனக்கு முழு உடன்பாடு இருக்கு என சொல்ல குணசேகரன் உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

மேலும் குணசேகரன் வார்த்தையை பார்த்து பேசணும் என பதில் கொடுக்கிறார். அடுத்து ஜனனி வீட்டில் எவ்வளவு பிரச்சனை நடந்துட்டு இருக்கு என சொல்ல சக்தி எல்லோரும் அவங்க அவங்கள பத்தி யோசிக்கிறாங்க நாம ஏன் நம்ம வாழ்க்கையை பத்தி யோசிக்க கூடாது என பதில் கொடுக்கிறார்.

இதனால் குணசேகரன் எடுக்கப் போக முடிவு என்ன என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.