
யாரோ ஒருவர் என்ட்ரி கொடுக்க நந்தினி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலின் நேற்றைய எபிசோட்டில் குணசேகரன் திரும்ப வருவான் ஆனால் ரொம்ப ஆபத்தானவனா வருவான் என்று அப்பத்தா சொன்ன நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் ஜான்சிராணி அப்பத்தா அடுத்த கட்டத்துக்கு முன்னேறி போய்கிட்டே இருக்கணும்னு சொல்லுச்சு அது என்ன கட்ட முடியும் கேட்டு சொல்லிடுங்க என்று சொல்ல நந்தினி இந்தா பாரு அவ்வளவு தான் உனக்கு மரியாதை என்று சொல்ல விசாலாட்சி போதும் இதோட எல்லாத்தையும் நிறுத்தி கொள்ளுங்கள் என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.

அதைக் தொடர்ந்து காரில் யாரோ ஒருவர் என்ட்ரி கொடுக்க கரிகாலன் அடுத்த இடி வந்துடுச்சு என்று சொல்ல ரேணுகா, நந்தினி அதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள்.